கடைகளுக்கு ஒரே நாளில் தொழில் உரிமம்..!
நகர்ப்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உணவு விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இதுபொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






