--- --:--:-- --

திருப்பூர்: டாஸ்மாக் கடையில் மது திருட்டு!

10

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் ஒருவன், கடையில் இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் மூட்டை கட்டி அள்ளி சென்றுள்ளான்.

 

இன்று கடை திறக்க வந்த ஊழியர்கள், கடை பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon