திருப்பூரில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் – பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், குப்பண்டம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் சோதனைக்கு சென்றனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த ஜாஹிர் அன்வர், ரவி ராஜா ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





