--- --:--:-- --

இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும்: ஈரான் – இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை

4

ரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர், சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர், பல நாட்டு தூதர்கள் பங்கேற்றிருந்த நிலையில், போர் நிறுத்தம் செய்ய உடனடி சர்வதேச அரசியல் தலையீடு தேவை என வலியுறுத்தப்பட்டது.

 

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றம். அமெரிக்கா போரில் ஈடுபட்டால் NPT ஒப்பந்தத்தை மீறுவதற்கு சமம் என ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவடையும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தூதர் டேனி டானன் தெரிவித்துள்ளார்.

 

அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவது மிக ஆபத்தானது என சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போர் பேரழிவுக்கு வழிவகுக்கும். உடனடி இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

Right Menu Icon