--- --:--:-- --

மெட்ரோ குடிநீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு..!

5

சென்னையில், காலை 7:30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் அருண் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

அதன்படி, மெட்ரோ குடிநீர் லாரிகள் காலை 5 மணி முதல் 7:30 மணிக்குள்ளாக தண்ணீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த பட்டியலை 3 நாட்களுக்கு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon