பழநி கோயிலில் இபிஎஸ் குடும்பத்துடன் தரிசனம்!
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தனது மனைவி ராதா மற்றும் குடும்பத்தினருடன் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று, ஆனந்த விநாயகர், முருகப் பெருமான், போகர் சன்னதிகளில் வழிபட்டார்.
திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரை வரவேற்றனர். தரிசனத்திற்குப் பிறகு, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குத் தாராபுரம் புறப்பட்டுச் சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




