திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஜூலை 7-ம் தேதி (ஞாயிறு) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னை, பழநி, மதுரை, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட கோயில்களில் இருந்து 300 பேர் கொண்ட குழுவினரை ஜூலை 1 முதல் 8 வரை பணியில் ஈடுபடுத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.






