கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
மருமகனுடன் தகாத உறவிலிருந்த பெண் அவரது கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. கர்நாடகாவின் கமசாகாவில் மீனாட்சி(55) என்பவர் தனது வீட்டில் கட்டட வேலைக்கு வந்த மருமகன் முறை கொண்ட பிரதீப்புடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார்.
இதனை நேரில் பார்த்த மீனாட்சியின் கணவர் சுப்பிரமணியை, மீனாட்சி அவரது காதலன் இருவரும் சேர்ந்து கொலை செய்து எரித்து குப்பையில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.






