--- --:--:-- --

அகமதாபாத் ஏர்போர்ட் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்து..!

1

விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. தற்போது காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து விமானம் புறப்படும் போது நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம் என்றும் கூறப்படுகிறது.

 

விமான விபத்தைத் தொடர்ந்து ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது தெரியவந்தது.

 

புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது.மதியம் 1.17 விமானம் புறப்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் தீ பற்றி கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 வகையை சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Right Menu Icon