--- --:--:-- --

பரவும் கொரோனா தொற்று..! மீண்டும் அமலாகும் ஊரடங்கு?

3

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்த 221 பேரில் 27 பேர் குணமான நிலையில், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 194 ஆக குறைந்துள்ளது.இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon