--- --:--:-- --

திருவாடானை பெட்ரோல் பங்க் அருகே தீ விபத்து..!

1

திருவாடானை பெட்ரோல் பங்க் அருகே தீ விபத்து தீ அணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எல் கே நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. பெட்ரோல் பங்க் பின்புறம் வயல் காட்டு பகுதியில் கருவேல மரங்கள் மற்றும் கழிவுகளை குவித்து வைக்கப்பட்டிருந்தது.

 

அது சற்றுமுன் திடீரென தீ பிடித்து  மளமளவென எரியத் தொடங்கியது.  அருகில் பெட்ரேல் பங்க் மற்றும் குடியிருப்பு இருந்ததால் மக்கள் தீ அணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கை தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில்  நிலையஅலுவலர் முருகானந்தம் ( போக்குவரத்து பொறுப்பு) தலைமையில் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர்.ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அனைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon