2 டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்க தடை..!
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.
சாலைகள் மோசமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கோர்ட், மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் மறு அறிவிப்பு வரும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சாலைகள் மோசமாக உள்ள மற்ற பகுதிகளிலும் இது நடைமுறைக்கு வருமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





