அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.இந்த நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் வரும் 28 தேதி தீர்ப்பளிக்கபடும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.





