--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமிக்கு நா கூசவில்லையா?- முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

3

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை பற்றி பேசவே தாம் டெல்லி செல்லவுள்ளதகாவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி தான் வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா என கடுமையாக சாடியுள்ளார்.

 

தனது கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை என்றும் பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை என்றும் கலைஞரின் கரம் பற்றி நடந்த கை என்றும் கூறியுள்ள முதல்வர், எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் தன் கைகள் ஏந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் இன்று கூட தாம் வழக்கு தொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாம் கொண்ட கொள்கையில் என்றும் உறுதியாக நின்று தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon