வெளியான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிஎம்டிஏ, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் 615 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தக் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மே மாதம் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.பொறியியல் மற்றும் எம்எஸ்சியில் குறிப்பிட்ட பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




