அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா..!
அரசு பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கி, 11-ம் வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் கோடை சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
மாணவிகள் நீலகிரி மாவட்டத்திற்கும், மாணவர்கள் ஏற்காட்டிற்கும் அழைத்து செல்லப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




