--- --:--:-- --

குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

1

தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவி இடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இதேபோல், கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன.

 

இதையடுத்துஇரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர்.

 

இதனிடையே, குரூப் 2, 2-ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், கொள்குறி வகை அடிப்படையிலான முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் முதன்மைத் தேர்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தேர்வு பிப். 23-ல் நடைபெற்றது.

 

இந்நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதில் 537 காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் 7,93,966 விண்ணப்பித்திருந்தனர். அதில் 5,83,467 பேர் தேர்வெழுதியுள்ளனர். 2,10,499 தேர்வு எழுதவில்லை. மேலும் 53 பணி நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon