--- --:--:-- --

5 நாட்கள் பயணமாக இன்று உதகை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

5 நாட்கள் பயணமாக இன்று உதகைக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.

 

அந்த வகையில் இந்த ஆண்டு மே 15-ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படவுள்ளது. கோடை சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர். கோடை விழாவின் தொடக்கமாக கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நிறைவடைந்த நிலையில், கூடலூரில் வாசனைப் பொருட்கள் கண்காட்சியும், உதகை அரசு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

 

இந்த ரோஜா கண்காட்சியில் பல வகையான ரோஜாக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில், மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 15ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக 5 நாட்கள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவர், சாலை வழியாக உதகைக்குச் செல்லவுள்ளார்.

 

அங்கு பொதுமக்களுக்குப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்தும் முதலமைச்சர் உரையாடவுள்ளார். இது போல, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதலமைச்சர், மே 16 அல்லது 17-ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon