பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார். அவருக்கு வயது 58. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார்.
பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.
புற்றுநோய் பாதிப்பால் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சுப்பிரமணி. இது அவருக்கு 4-ம் கட்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தார்.
அண்மையில், விஜய் டிவி தொகுப்பாளரும், நடிகருமான பாலா உதவிக்கரம் நீட்டினார். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த சூப்பர் குட் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




