CBSE கட்டாயத் தேர்ச்சி முறையில் மாற்றம்..!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைந்தன.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 18 லட்சம் மாணவர்களும் பங்கேற்று தேர்வு எழுதினர்.விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதலில் 12 ஆம் வகுப்பிற்கான முடிவுகள் வெளியாகும் எனவும், அதைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பிற்கான முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு போன்ற நடைமுறை தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்விக்கொள்கை 2020ன் படி 8ம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.
அதேபோல் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி இருந்த நிலையில் இந்த ஆண்டு 2025 மே 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.ஆனால் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள் திருத்தப்பட்டு, மாணவர்கள் பழைய விதிமுறை அடுத்த வகுப்புக்கு சென்று விட்டதாகவுன், தற்போது மே ஒன்றாம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளதால் அடுத்த ஆண்டு மட்டுமே இது முழுமையாக நடைமுறைக்கு வருமென ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




