திருப்பூரில் ஓட்டுநரை கடித்த பாம்பு!
பல்லடம், காரணம்பேட்டை பகுதியில், லாரி ஓட்டுநர் ஒருவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற பாம்பு ஒன்றை அவர் எதிர்பாராத விதமாக மிதித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பாம்பானது ஓட்டுநரை கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




