--- --:--:-- --

திருப்பூர், திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனி  ஸ்ரீ காமாட்சி அம்மன்  ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..!  

3

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா கடந்த 12ம் தேதி சனிக்கிழமை  மங்கல இசை, ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

 

தொடர்ந்து கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ  மாதவனேஸ்வரர் கோவிலில் இருந்து பம்பை, மேள வாத்தியங்களுடன் புறப்பட்டு திருமுருகன்பூண்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்தது. பின்னர் அங்கு சீர் தட்டு வாங்கிய நிலையில் குறி கேட்டு பட்டுவஸ்திரங்களுடன் ஊர்வலமாக நெசவாளர்கள் அணி வந்தது.

 

தொடர்ந்து மேல் வாஸ்து பூஜை, தீபாராதனை, பிரசாதம் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமம், தீபாராதனை நடந்தது.  நேற்று மாலை 4 மணிக்கு முதல் கால யாகசாலை  பூஜை தொடர்ந்து தீபாராதனை பிரச்சாரம் வழங்குதல் நடந்தது.

 

இன்று  திங்கட்கிழமை 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை  பூஜையும்,  தொடர்ந்து தீபாராதனையும், தொடர்ந்து  காலை 9 மணிக்கு மேல் திருக்குடங்கள் புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் விமானக் கலசத்திற்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. அப்போது பெண்களும், பொதுமக்களுக்கும், பக்தர்களும்  ஓம் சக்தி, பராசக்தி., ஓம் சக்தி, பராசக்தி  என கோஷமிட்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.

 

பின்னர் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை  கூனம்பட்டி ஆதீனம் திருமடம் ஸ்ரீலஸ்ரீ  நடராஜ சுவாமிகள் தலைமையில்  அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள், விஜயமங்கலம் அப்பரடிபொடி புலவர் சொக்கலிங்கனார் ஆகியோர் முன்னிலையில் நடத்தி வைத்தார்.

கும்பாபிஷேகம் திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோயில் தலைமை குருக்கள் முத்து சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார் குழுவினர் செய்து இருந்தனர். சன் டிவி புகழ் பாபு என்கிற மாமுண்டி குழுவினரின் நாதஸ்வர இசை வாசித்தார். இதனைத்தொடர்ந்து  தசதானம், தசதரிசனம், மஹா அபிஷேகம், மஹா  தீபாராதனை நடந்தது.

 

தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு  திருமுருகன்பூண்டி,  அம்மாபாளையம் சுற்று பகுதியை  சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் நடனமாட ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலை குழுவின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமையில் இணை ஆசிரியர்கள் முகேஷ், செல்வி கார்னிகா, குட்டி ஆசிரியர் வருண் மற்றும் குழுவினரின்  வள்ளி கும்மி  நிகழ்ச்சி நடந்தது.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் முத்துக்குமார், செயலாளர் சங்கர், பொருளாளர் அருணாச்சலம், துணைத்தலைவர் சரவணன், துணை செயலாளர்கள் மாரிமுத்து, கோபால், துணைப் பொருளாளர் ஆறுமுகம், கமிட்டி உறுப்பினர்கள் சிதம்பரம், சந்திரமணி, கலைச்செல்வம், சுரேஷ் மற்றும் விழா கமிட்டி, திருமுருகன்பூண்டி  ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி குடியிருப்போர் மற்றும் ஊர் பொதுமக்கள், மகளிர் மன்றம், திருப்பூர் குமரன் நற்பணி மன்றம், இளைஞர் நற்பணி மன்றம், செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. நாளை 15  ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 24 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.

Right Menu Icon