‘கதக்’ கலைஞர் குமுதினி காலமானார்!
இந்தியாவின் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான குமுதினி லக்கியா (95), வயது மூப்பு காரணமாக அகமதாபாத்தில் காலமானர்.
கதக் நடனத்துக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட குமுதினிக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி அரசு கவுரவித்துள்ளது. கதக் நடன வளர்ச்சிக்காக ‘கடம்ப் செண்டர் ஃபார் டான்ஸ்’ அமைப்பையும் அவர் நடத்தி வந்தார்.





