நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் 11ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது.
மேலும், மதுக்கடைகளுடன் இணைந்துள்ள பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள், ஹோட்டல்களில் இயங்கும் பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





