தமிழக அரசுக்குக் கெடு விதித்த ஜாக்டோ – ஜியோ!
அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மார்ச் 30ஆம் தேதி வரை ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு கெடு விதித்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பை எதிர்பார்த்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக JACTO-GEOவின் மூத்த தலைவர் மாயவன் கூறியுள்ளார்.
வரும் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




