இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது..!
இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜாகுவார் வகை போர்விமானம், அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பி ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
ஆனால், நல்வாய்ப்பாக விமானி முன்கூட்டியே பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இது தொடர்பாக ராணுவம் விசாரணையை தொடங்கியுள்ளது.





