ஸ்பெஷல் கிளாஸ் சென்ற மாணவன்.. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!
பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளி நேரம் முடிந்தால் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுள்ளது. 12ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் ஒரு மாணவனை வகுப்பு ஆசிரியர் பிரான்சிஸ் என்பவர் தனியறைக்கு அழைத்து சென்று பாலியல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவர் வீட்டிற்கு சென்ற நிலையில் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளான்.
மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சம்பவம் குறித்து பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சமாதானம் ஆகாத பெற்றோர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் புளியங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பிரான்சிஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆசிரியர் பிரான்சிஸ் என்பவர் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள் பலரிடம் இது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





