பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை..!
பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை அளிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.





