காப்பு காட்டில் கிடந்த திருநங்கையின் சடலம்..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள காவல் நிலையம் அருகே உள்ள அரசு காப்பு காட்டில் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காப்பு காட்டில் வைத்து கொலை செய்தார்களா? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு காப்பு காட்டில் வீசி செல்லப்பட்டதா அல்லது இது கொலையா? தற்கொலையா? என விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் தஞ்சாவூரை சேர்ந்த சங்கவி என்பது தெரிய வந்ததை எடுத்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். விருதாச்சலம் கடலூர் பிரதான சாலையில் உள்ள ஒருவரின் வீட்டில் சங்கவி மற்றும் அவரது திருநங்கை தோழிகள் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இதற்கு காரணமும் சங்கவி தான் என்று அவர் உடன் வசித்து வந்தவர்கள் தொடர்ச்சியாக சங்கவியுடன் சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து சங்கவிக்கும் மொட்டை அடித்து ஊரை விட்டு துரத்தி விடலாம் என ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக பழக்கடை சேகர் என்பவரை வைத்து பஞ்சாயத்து செய்துள்ளனர்.
அப்பொழுது சங்கவிக்கும் அவரது எதிராளிகளுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறவே நிரோஷா என்ற திருநங்கையும் மரிக்கொழுந்து என்ற திருநங்கையும் சேர்ந்து சங்கவியை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் எடுத்து சென்று கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் விட்டு சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





