விரைவில் இடிக்கப்பட உள்ள பிரபல தியேட்டர்..!
மதுரையில் முப்பது ஆண்டுகளாக ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த பிரபல திரையரங்கம் ஒன்று விரைவில் இடிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியான அண்ணா நகரில் உள்ளது அம்பிகா திரையரங்கம்.
30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த திரையரங்கத்தில் தான் மதுரையில் முதல் முறையாக டிடிஎஸ் சவுண்டுடன் ரட்சகன் படம் மற்றும் 2k, 3k, 4k பாடங்கள் திரையிடப்பட்டது. பாட்ஷா, வாளி, கில்லி, கஜினி, அலைபாயுதே உள்ளிட்ட பல படங்கள் இந்த திரையரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது.
இப்படி 30 ஆண்டுகளாக ரசிகர்களின் கைதட்டலை கேட்ட அம்பிகா திரையரங்கத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் வெகுவிரைவில் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மதுரை மற்றும் சுற்று வட்டார திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





