--- --:--:-- --

அறிவியல் ஆய்வுக் கட்டுரை : ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவிகளின் கட்டுரை சிறந்ததாக தேர்வு

2

றிவியல் ஆய்வுக் கட்டுரையில் மாநில அளவில் சிறந்த படைப்பாக தேர்வு ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவிகளுக்கு குழந்தை விஞ்ஞானி பட்டம்..!

 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவிகள் இனியாஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் பிரித்திவிராஜ் தலைமையில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் அறிவியல் ஆய்வுக்கட்டுரை தயாரித்தனர்.

 

அதனை சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,கணித அறிவியல் நிறுவனம், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மற்றும் செஸ்டாட்ஸ் இணைந்து திருப்பூர் எல்.ஆர். ஜி மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு சமர்ப்பித்து அதில் தேர்வு பெற்று கோவை கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு மாநில அளவில் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு குழந்தை விஞ்ஞானி என்ற நற்சான்றிதழுடன் கேடயம்,பதக்கம் மற்றும் பரிசுகளை பெற்றனர்.

 

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாநில அளவில் தேர்வு பெற்ற ஒரே பள்ளி ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு பெற்ற மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்  பள்ளியின் தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர்,  தாளாளர் பாலசுப்பிரமணியம் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி,ஆசிரிய ஆசிரியைகள்,பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Right Menu Icon