youtube திவ்யா உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப் திவ்யா உள்ளிட்ட நான்கு பேர் விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்தி, சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பதற்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு கார்த்திக், ஆனந்த் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையினரால் அழைத்துவரப்பட்டனர்.
திவ்யா, சித்ரா ஆகிய இருவரும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நான்கு பேருக்கும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





