கணவனுக்கு துரோகம் செய்த பெண்.. ஒரு கிட்னியுடன் திரியும் கணவன்..!
யாரும் கனவில் கூட நினைக்க முடியாத வகையில் தன் கணவனுக்கு துரோகம் செய்துள்ளார் காதல் மனைவி ஒருவர். பாதிக்கப்பட்ட கணவன் ஒரே ஒரு கிட்னியுடன் சுற்றிவரும் நிலையில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹௌரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை காரணம் காட்டியும் பொருளாதார நிலைமையை கூறியும் அடிக்கடி கணவனுடன் சண்டை இட்டு வந்துள்ளார்.
அந்த பெண் ஒரு கட்டத்தில் அதில் கடுப்பான அந்த பெண் நம் மகளின் கல்வியை மற்றும் திருமணத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டும். அதற்காக உங்களது கிட்னியை 10 லட்சத்திற்கு விற்று விடுங்கள் என மனசாட்சியை இன்றி நேரடியாகவே கணவனிடம் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி தினமும் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.
அந்த பெண் ஒரு கட்டத்தில் மனைவியின் தொல்லையை தாங்க முடியாத கணவன் கிட்னியை விற்க முடிவு செய்து பலரையும் அனுப்பியுள்ளார். பின்னர் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு கிட்னியை பெற்று பணத்தை மனைவியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கணவனுக்கு தெரியவில்லை கிட்னி விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு தன் மனைவி வேறொரு நபருடன் சென்றுவிடுவார் என்று 10 லட்சத்தை வாங்கிய மனைவி அடுத்த நாளை முகநூலில் பழக்கமான ஆண் நண்பருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ந்து போன கணவன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மனைவியை தேடி சென்ற கணவனிடம் விவாகரத்து கடிதம் அனுப்பிகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





