உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளாவில் நெரிசல்!
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினம் என்பதால் லட்சக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




