அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் மரணம்!
அரசுப் பள்ளியில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சக்தி சோமையா (15), இன்று பள்ளியில் கம்ப்யூட்டர் ஒயரை பிளக்கில் சொருகியபோது, மின்சாரம் பாய்ந்து பலத்த தீக்காயம் அடைந்தான்.
ஹாஸ்பிடல் சென்றும் சிகிச்சை பலனின்றி சக்தி உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






