வேங்கைவயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்தது யார்?
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்தது யார் என்ற தகவலை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசு, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றம் நடந்துள்ளதாகவும், முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.






