ஊருக்கு சென்றுவிட்ட மோனாலிசா..!
மகா கும்பமேளாவில், தன் கருப்பழகால் கவனத்தை ஈர்த்த மோனாலிசா போஸ்லே (16) ஊருக்கு சென்றுவிட்டாராம். பிரபலமாகிவிட்ட இவரை, பின்தொடர்ந்து சிலர் துரத்தவும், துன்புறுத்தவும் செய்ததால், இந்தூருக்கு சென்றுவிட்டார்.
இதை X-ல் பதிவிட்டுள்ள அவர், மாலைகள் விற்க வந்த தன்னால், கும்பமேளாவில் குழப்பம் ஏற்படுவதை தடுக்கவும், தன்னால் குடும்பத்தினர் தொல்லைக்கு ஆளாவதை தவிர்க்கவும் ஊருக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.






