6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




