பொங்கலுக்கு டாஸ்மாக்கில் ரூ.450 கோடிக்கு மது விற்பனை..!
பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளில் ரூ.450 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த 13ஆம் தேதி ரூ.185.65 கோடிக்கும், 14ஆம் தேதி ரூ.268.46 கோடிக்கும் மது விற்பனை நடந்திருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மது விற்பனை நடைபெறவில்லை. கடந்த பொங்கலுக்கும் ரூ.450 கோடிக்கு மது விற்பனையானது.






