மகா கும்பமேளாவில் முட்களில் படுக்கும் பாபா!
மகா கும்பமேளாவில் ரமேஷ் குமார் மஞ்சி என்ற “காண்டே வாலே பாபா’ முட்களில் படுத்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த 40 – 50 ஆண்டுகளாக இவ்வாறு முட்களில் படுப்பதாக அவர் கூறுகிறார்.
இது உடலுக்கு நன்மை பயக்கும் எனவும் இதனால் காயங்கள் ஏற்படாது என்றும் தெரிவித்தார். மேலும், கடவுளே தனக்கு அறிவையும் ஆற்றலையும் தருகிறார் என்றும், தான் பெறும் தட்சணையில் பாதியை தானம் செய்வதாகவும் கூறுகிறார்.






