களை கட்டிய புத்தக கண்காட்சி..!
வார விடுமுறையை ஒட்டி சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வாசிப்பாளர்களின் கூட்டம் அலைமோதியது. பவாசி நடத்தும் 48வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஓஎம்சிஏ மைதானத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு 10% தள்ளுபடி உடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று வார விடுமுறையை ஒட்டி புத்தக கண்காட்சிகள் வழக்கத்தை விட அதிக அளவில் வாசிகர்கள் குவிந்தனர். மேலும் தங்களுக்கு கிடைத்த புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





