விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் இறுக்கிய கயிறு..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே துணியால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிய பொழுது கழுத்தில் துணி சுற்றிக்கொண்டு இறுக்கியதில் 15 வயது சிறுமி உயிரிழந்தார்.
கோனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் என்பவரின் மகள் ரிதுவர்ஷினி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது விபரீதம் நிகழ்ந்த நிலையில் அருகில் யாரும் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திட்டக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





