--- --:--:-- --

பெ.சண்முகத்துக்கு வாழ்த்து சொன்ன அரசியல் தலைவர்கள்..!

5

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

சமூக வலைதளத்தில் அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாய தோழர்களுக்காகவும் உழைத்த சண்முகத்துக்கு அம்பேத்கர் விருதை அரசு வழங்கியதாகவும் அத்தகைய சிறப்புக்குரியவர் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கூட்டணியின் வெற்றிகளுக்கு உழைத்த கே. பாலகிருஷ்ணனுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் பொதுவுடைமை பாதையில் ஏழை மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவரின் பணி வரும் காலங்களிலும் சமரசம் இன்றி தொடரட்டும் என கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon