துணைநிலை ஆளுநருக்கு முதல்வர் பதிலடி..!
டெல்லி முதலமைச்சர் அதிஷியை தற்காலிக முதல்வர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் அதிஷியை தற்காலிக முதல்வர் என குறிப்பிட்டார். இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா கடிதம் எழுதினார்.
அதில் தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது ஆட்சேபனைக்குரியது என குறிப்பிட்டு இருந்தார். இது உங்களுக்கு மட்டுமின்றி எனக்கும் அவமானம் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள அதிஷி அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தற்காலிக மாணவர்களே என்றும் பதவிக்காலம் முடியும் வரை மட்டுமே பதவியில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





