மூன்று தொழிலதிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது..!
மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். சீமா அகர்வால் என்ற பெயரில் ஜெய்ப்பூரை சேர்ந்த நகை கடை உரிமையாளரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் வீட்டில் இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணத்துடன் அவர் மாயமாகியுள்ளார் இத்தொடர்பான புகாரில் சீமாவை ஜெய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ஆந்திரா, ஹரியானா, ஜெய்ப்பூரை சேர்ந்த மூன்று தொழிலதிபர்களை சீமா திருமணம் செய்ததும் அவர்களிடமிருந்து பணம், நகைகளை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





