இன்று கூடுகிறது திமுக செயற்குழு..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரம், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காதது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டநிலையில், செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




