--- --:--:-- --

தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி..!

6

ஜெயம் ரவி, ஆர்த்தி, ஜிவி பிரகாஷ், சைந்தவி மற்றும் ஏ.ஆர்.ரகுமான், சயிராபானு என தொடர்ந்து தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

 

தற்பொழுது பிரபல இயக்குனர் சீனு ராமசாமியும் தனது மனைவியுடன் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். கூடல் நகரத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என பல படங்களை கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் 17 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த விவாகரத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

Right Menu Icon