--- --:--:-- --

400 ஆடுகளை கடித்து குதறிய தெருநாய்..!

3

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களில் 400 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த கால்நடைகளுடன் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விவசாயிகள் கால்நடைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல முடியாதவாறு போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 45 நாட்களில் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதை எடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

 

Right Menu Icon