அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலை : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலையை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலை செய்தவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.





