திருப்பூர் மாவட்ட அளவிலான 6 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டி..!
திருப்பூர் மாவட்ட அளவிலான 6 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டியில் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 3 இடங்களில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை..!
தமிழக அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில், நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து, அவற்றை முறையாக பராமரித்து, பசுமையாக்கி வருங்கால தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தை மாணவர்களுடைய வளர்க்கும் நோக்கில் இக்கல்வியாண்டில் “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ” என்ற மைய கருத்தின் அடிப்படையில் கலைத்திருவிழாவை நடத்த உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் பள்ளி அளவில், குறுவள மைய மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருமாறு: ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியில் பல்லடம், அல்லாபுரம் பள்ளியைச் சேர்ந்த லக்ஷிதா ஸ்ரீ முதலிடம், தாராபுரம், நஞ்சியம்பாளையம் பள்ளியைச் சேர்ந்த அபினேஷ் இரண்டாம் இடம், திருப்பூர் தெற்கு வெள்ளியங்காடு பள்ளியை சேர்ந்த ஹாசினி மூன்றாம் இடமும், களிமண் சுதை வேலைப்பாடு போட்டியில் பல்லடம், மாணிக்காபுரம் பள்ளி நிஷாந்த் முதலிடம், பொங்கலூர் கேத்தனூர் பள்ளி சுபிட்சன் இரண்டாம் இடம், திருப்பூர் மண்ணரை பள்ளியை சேர்ந்த யோகிதா மூன்றாம் இடமும், மணல் சிற்பம் போட்டியில் திருப்பூர் நல்லூர் பள்ளி ரித்தீஷ் குமார் முதலிடம், திருப்பூர் திருநீலகண்டபுரம் பள்ளி ஸ்ரீநாத் இரண்டாம் இடம், தாராபுரம், பெரிய புதூர் பள்ளி தியாகேஷ் மூன்றாம் இடமும் பெற்றனர்.
அதேபோல், செவ்வியல் இசை (தனிப்பாட்டு) போட்டியில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பள்ளி மாணவி சுவேதா முதலிடம், 15 வேலம்பாளையம் பள்ளி ஷான் துல்கர் இரண்டாம் இடம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அபிநந்தனா மூன்றாம் இடமும், நாட்டுப்புறப் பாடல் (தனிப்பாட்டு) போட்டியில் ஜெய்வாபாய் பள்ளி அணு கீர்த்தனா முதலிடம், சிறுபூலுவப்பட்டி பள்ளி ஸ்வேதா இரண்டாம் இடம், குண்டடம் முதலிபாளையம் பள்ளி தீபிகா மூன்றாம் இடமும், வில்லுப்பாட்டு போட்டியில் அவிநாசி திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பள்ளி இசைக்குயில் குழுவினர் முதல் இடம், திருப்பூர், சமத்துவபுரம் பள்ளி கலைமகள் வில்லிசை குழுவினர் இரண்டாம் இடம், பல்லடம், மாதேஸ்வரன் நகர் பள்ளி தெம்மாங்கு குழுவினர் மூன்றாம் இடமும் பெற்றனர்.

மேலும், நாட்டுப்புற கிராமிய நடனத்தில் சிறுபூலுவப்பட்டி பள்ளி மயில் தோகை குழுவினர் முதலிடம், அவிநாசி திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பள்ளி கிராமத்து மின்னல்கள் குழுவினர் இரண்டாம் இடம், திருப்பூர், அரண்மனைபுதூர் பள்ளி விஜயா கலை குழுவினர் மூன்றாம் இடமும், பரதநாட்டியத்தில் அவிநாசி திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் முருகன் கெளத்துவம் குழுவினர் முதலிடம், சிறுபூலுவப்பட்டி பள்ளி சிறகுகள் குழுவினர் இரண்டாம் இடம், பொங்கலூர், பெருந்தொழுவு பள்ளி விஸ்வ ஜோதி குழுவினர் மூன்றாம் இடமும், அதேபோல் தனிநபர் நடிப்பில் மூலனூர் என்.ஜி.சி வலசு பள்ளி சுஹாசினி முதலிடம், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பள்ளி சம்வர்த்திகா இரண்டாம் இடம், ஜெய்வாபாய் பள்ளி மோகிதா மூன்றாம் இடமும், நகைச்சுவை வழங்குதல் போட்டியில் குடிமங்கலம், கோட்டமங்கலம் பள்ளி மதிவதனா முதலிடம், உடுமலை, அந்தியூர் பள்ளி சுமன் இரண்டாம் இடம், வெள்ளகோவில், முத்தூர் பள்ளி ஷவீன் மூன்றாம் இடமும், பலகுரல் போட்டியில் காங்கேயம், வீரணம்பாளையம் பள்ளி ஷாம் கண்ணன் முதலிடம், பல்லடம், மாதேஸ்வரன் நகர் பள்ளி நித்திஷ் இரண்டாம் இடம், குடிமங்கலம் சோமவாரப்பட்டி பள்ளி விஷ்ணுவர்தன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டிகளில் திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி செவ்வியல் இசை ( தனிப்பாட்டு), வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் ஆகிய மூன்று போட்டியில் முதலிடம் என மூன்று போட்டியில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று மற்றொரு சாதனை படைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




